Sri Lanka தெற்காசியாவில் முதல் முறையாக சூரிய மற்றும் உயிரிவாயு சக்தியில் இயங்கும் கலப்பு (Hybrid) பேக்கரி அடுப்பை அறிமுகப்படுத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த புதிய சூரிய கலப்பு பேக்கரி அடுப்பு கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள Cinnamon Lakeside Colombo ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
Incitare International மற்றும் Global Rethinking Finance Collaborative ஆகிய அமைப்புகள், German Tech Kilinochchi நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த திட்டத்தின் மூலம் எரிபொருள் அடிப்படையிலான பாரம்பரிய பேக்கரி முறைகளுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க சக்தியை பயன்படுத்தும் ஐரோப்பிய தொழில்நுட்பம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது நிலையான வாழ்வாதாரம், சுத்தமான சக்தி பயன்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை முன்னேற்றும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
Beris Gwynne கருத்து தெரிவிக்கையில், இந்த தொழில்நுட்பம் சமூகங்கள், பேக்கரிகள், சுற்றுலா துறை மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு பெரும் பயனளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், கார்பன் வெளியீட்டை குறைப்பதோடு, எரிபொருள் இறக்குமதி சார்பையும் குறைத்து, எதிர்காலத்தில் புதிய ஏற்றுமதி துறையாக வளர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையில் சூரிய சக்தி பயன்பாடு இன்னும் 12 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும், எரிபொருள் விநியோக சிக்கல்கள் மற்றும் நீர்மின் உற்பத்தி குறைவு போன்ற சவால்களை நாடு எதிர்கொண்டு வருவதாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.





