வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம் செய்த BOI

Board of Investment of Sri Lanka வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் “Ready to Invest” என்ற புதிய டிஜிட்டல் முதலீட்டு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தளம் மூலம் பல்வேறு துறைகளில் தயார்நிலையிலுள்ள 30 முதலீட்டு திட்டங்கள் நேரடியாக சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு
readytoinvestsl.com

BOI தெரிவித்ததாவது, சுற்றுலா மற்றும் ஓய்வு, உற்பத்தித்துறை, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தல், நகர அபிவிருத்தி, விமான மற்றும் துறைமுக கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச முதலீட்டு கூட்டாண்மைகளுக்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் தயார் நிலையில் உள்ள திட்டங்களுடன் உலக முதலீட்டாளர்களை இணைப்பதே இந்த முயற்சியின் நோக்கமாக BOI தெரிவித்துள்ளது.

இலங்கை 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 1.06 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாகவும் BOI சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான BOI அங்கீகாரம் பெற்ற திட்டங்கள் செயல்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான துறைகளில் 100 சதவீத வெளிநாட்டு உரிமை அனுமதிக்கப்படுவதுடன், முதலீட்டு மூலதனம் மற்றும் லாபங்களை வெளிநாடுகளுக்கு மீள அனுப்பும் உத்தரவாதமும் வழங்கப்படுவதாக BOI குறிப்பிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore