ஏர்பேக் கோளாறு: அமெரிக்காவில் சுமார் 99,000 வாகனங்களை மீளப்பெறும் ஹோண்டா

Honda Motor Co. நிறுவனம், ஏர்பேக் தானாக செயல்படும் அபாயம் காணப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் சுமார் 98,892 வாகனங்களை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் National Highway Traffic Safety Administration (NHTSA) வெளியிட்ட தகவலின்படி, சில Acura TLX, Honda Accord Hybrid மற்றும் 2022 ஆம் ஆண்டு Honda Accord மாடல்கள் இந்த மீளப்பெறும் நடவடிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்பக்க பயணியரின் இருக்கையில் பொருத்தப்பட்டுள்ள எடை உணரிக் கருவியில் (Weight Sensor) ஏற்படக்கூடிய விரிசல் மற்றும் மின்குறுக்குச் சுற்று காரணமாக இந்த பிரச்சினை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளாறு காரணமாக, குழந்தைகள் அல்லது குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகளில் அமர்ந்திருக்கும் சந்தர்ப்பங்களிலும் ஏர்பேக் திடீரென செயல்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தீர்வாக, பாதிக்கப்பட்ட வாகனங்களில் உள்ள குறைபாடுள்ள எடை உணரிக் கருவிகளை இலவசமாக மாற்றி வழங்க விற்பனையகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக NHTSA தெரிவித்துள்ளது.

இந்த கோளாறுடன் தொடர்புடைய காயங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore