இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ளது.

இரு நாட்டு கிரிக்கெட் உள்வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ‘Cricbuzz’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இப்போட்டிகள் நடைபெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், போட்டிகள் நடைபெறும் திகதிகள் குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த டெஸ்ட் போட்டிகள் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடத்தப்படவுள்ளன.

எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையே நடத்தப்படவிருக்கும் இருபதுக்கு 20 போட்டிகள் குறித்து இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore