இலங்கை பொலிஸாருக்கு 134 Single-Cab வாகனங்கள் வழங்கிய இந்தியா

India அரசாங்கம், Anura Kumara Dissanayake தலைமையிலான இலங்கை அரசுக்கு, Indo-Sri Lanka Friendship Programme திட்டத்தின் கீழ் 134 Single-Cab வாகனங்களை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

இந்த நிகழ்வு இன்று (25) Presidential Secretariat இல் நடைபெற்றது.

சுமார் ரூ.300 மில்லியன் மதிப்புடைய இந்த வாகனங்கள், வட மாகாணத்திலுள்ள Sri Lanka Police பொலிஸ் நிலையங்களில் சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய Santosh Jha, எதிர்காலத்திலும் இலங்கைக்கு இதுபோன்ற உதவிகளை வழங்க இந்தியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது, Priyantha Weerasooriya, இந்திய உயர்ஸ்தானிகருக்கு நினைவுப்பரிசொன்றை வழங்கி நன்றியை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் Ananda Wijepala, பிரதியமைச்சர் சுனில் வட்டகல, அமைச்சின் செயலாளர் Ravi Seneviratne, DIMO நிறுவனத்தின் பொது முகாமையாளர் ராஜீவ் பண்டிதகே, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore