United States மற்றும் Iran இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, உலக எண்ணெய் விலைகள் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு திங்கட்கிழமை சரிவடைந்துள்ளன.
வட கடல் Brent Crude எண்ணெய் விலை சுமார் 5% குறைந்து பேரலுக்கு 99.41 அமெரிக்க டொலராகவும், West Texas Intermediate (WTI) எண்ணெய் விலை 92.49 அமெரிக்க டொலராகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில், Tokyo பங்குச்சந்தை ஆரம்ப வர்த்தகத்தில் 3% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, Hong Kong மற்றும் Seoul நகரங்களில் பொது விடுமுறை காரணமாக சந்தைகள் மூடப்பட்டிருந்தன.
Shanghai, தைப்பே, மணிலா, பாங்காக், ஜகார்த்தா, சிங்கப்பூர், சிட்னி மற்றும் வெலிங்டன் சந்தைகளும் உயர்வைக் கண்டுள்ளன. ஆனால் Kuala Lumpur சந்தை 0.1% வீழ்ச்சியடைந்தது.
எனினும், Strait of Hormuz வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தை மீண்டும் முழுமையாக இயலுமைப்படுத்துவது தொடர்பில் இன்னும் பல கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.
Donald Trump, “ஒப்பந்தத்தை அவசரப்படுத்த வேண்டாம்” என்று அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஈரான் தனது அதிக அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்குமா என்பது முக்கிய சிக்கல்களில் ஒன்றாக உள்ளது.
மேலும், அமெரிக்க தடைகளின் கீழ் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகள் விடுவிக்கப்படுமா மற்றும் Lebanon அமைதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுமா என்பதும் முக்கிய விவாதங்களாக உள்ளது.
ஆய்வாளர்கள் தெரிவிப்பதாவது, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து முழுமையாக வழமையிலைக்கு திரும்பவும், சேதமடைந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் பழுதுபார்க்கப்படவும் இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





