2029 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசு நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக கூறினார்.
கடந்த காலங்களில் தவறான தீர்மானங்களால் இலங்கை திசைதெரியாத நிலைக்கு சென்றதாக குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய நிர்வாகம் அந்த நிலையை மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஆதரவால் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகள் வரலாற்றிலேயே அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.





