அமெரிக்க அதிபர் Donald Trump காங்கிரஸ் அனுமதி இல்லாமல் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் “War Powers Resolution” எனப்படும் தீர்மானத்தை அமெரிக்க செனட் முன்னேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்தை முன்னேற்றும் நடைமுறை வாக்கெடுப்பு 50 – 47 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் சில குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பு, நீடித்து வரும் ஈரான் போரின் பின்னணியில் ஜனாதிபதி Trump-இன் போர் நடவடிக்கைகள் குறித்து குடியரசுக் கட்சிக்குள் கூட அதிருப்தி அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செனட் சிறுபான்மை தலைவர் Chuck Schumer,
“இந்த ஜனாதிபதி நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் விளையாடும் குழந்தையைப் போன்றவர்” என கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்க அரசியலமைப்பின் படி, போரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கே உரியது; ஜனாதிபதிக்கு அல்ல என பல சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், இந்த தீர்மானம் இன்னும் இறுதி சட்டமாகவில்லை. இது அமலுக்கு வர:
முழுமையான செனட் ஒப்புதல்,
பிரதிநிதிகள் சபை அனுமதி,
மேலும் ஜனாதிபதி veto-வை மீற இரண்டு-மூன்றாம் பங்கு பெரும்பான்மை
தேவைப்படும்.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரியில் தொடங்கிய ஈரான் மோதல் உலக எரிசக்தி சந்தை மற்றும் வாழ்க்கைச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1973 ஆம் ஆண்டு அமெரிக்க War Powers சட்டத்தின் படி, ஜனாதிபதி காங்கிரஸ் அனுமதி இல்லாமல் 60 நாட்களுக்கு மேல் போரை நடத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.





