அமெரிக்க டாலர் விலை மேலும் உயர்வு – சில வங்கிகளில் ரூ. 346 வரை

இலங்கையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் சரிவடைந்துள்ளதாக வணிக வங்கிகள் இன்று (20) தெரிவித்துள்ளன.

நேற்றுடன் ஒப்பிடுகையில் டாலரின் விற்பனை விலை பல வங்கிகளில் உயர்வு கண்டுள்ளது. சில வங்கிகளில் இது ரூ. 346 வரை உயர்ந்துள்ளது.

செய்லான் வங்கியில், அமெரிக்க டாலரின் வாங்கும் விலை ரூ. 333.75 ஆகவும், விற்பனை விலை ரூ. 345.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

NDB வங்கியில் வாங்கும் விலை ரூ. 335 ஆகவும், விற்பனை விலை ரூ. 345 ஆகவும் உயர்ந்துள்ளது.

பீப்பிள்ஸ் வங்கியில் வாங்கும் விலை ரூ. 335.64 ஆகவும், விற்பனை விலை ரூ. 345.20 ஆகவும் பதிவாகியுள்ளது.

கமர்ஷியல் வங்கியில் விற்பனை விலை ரூ. 346.50 வரை உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியிலும் டாலர் விலை உயர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய மதிப்பு தொடர்ந்து குறைவதால் இறக்குமதி செலவுகள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore