களுத்துறை தெற்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை ஒன்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசேட நடவடிக்கை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான பொலிஸ் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் இணைந்து நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் போது பணியில் இருந்த நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்த 8 பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் 1 நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் பாயகல, யட்டியன, தொடங்கொட, தெபுவன, மீகஹத்தென்ன மற்றும் களுத்துறை தெற்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





