சீன அதிபர் Xi Jinping மற்றும் அமெரிக்க அதிபர் Donald Trump இடையிலான உச்சி மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக அமைந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் சீனா – அமெரிக்க உறவுகள், உலக அமைதி, பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
அவரின் விளக்கத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
🔹 சீனா – அமெரிக்க உறவுக்கு புதிய தொடக்கம்
இரு நாடுகளும் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உள்ள நிலையில், போட்டியை விட ஒத்துழைப்பே முக்கியம் என இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
🔹 “Strategic Stability” உறவு
சண்டை மற்றும் மோதல்களை தவிர்த்து, நீண்டகால அமைதி, பரஸ்பர மரியாதை மற்றும் சமநிலையுடன் உறவை முன்னெடுக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
🔹 மக்கள்-to-மக்கள் உறவு வலுப்படுத்தல்
அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 அமெரிக்க இளைஞர்களை சீனாவில் கல்வி மற்றும் கலாசார பரிமாற்ற திட்டங்களுக்கு அழைக்கும் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.
🔹 Taiwan தொடர்பான நிலைப்பாடு
தைவான் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என சீனா மீண்டும் வலியுறுத்தியதுடன், “One China Policy”யை அமெரிக்கா மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
🔹 பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்
இரு நாடுகளும் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்கவும், சுங்கவரி மற்றும் சந்தை அணுகல் தொடர்பான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
🔹 மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் விவகாரம்
போர் தீர்வல்ல; பேச்சுவார்த்தையே ஒரே வழி என சீனா தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பிரச்சினை மற்றும் உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக, உலக அமைதி மற்றும் மனிதகுல முன்னேற்றத்திற்காக சீனா – அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என Wang Yi தெரிவித்துள்ளார்.





