Thailand அரசு சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லா (visa-free) தங்கும் காலத்தை குறைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
முன்பு 60 நாட்கள் வரை வழங்கப்பட்டிருந்த விசா இல்லா தங்கும் அனுமதி தற்போது அதிகபட்சமாக 30 நாட்களாக குறைக்கப்படவுள்ளது. சில நாடுகளுக்கு இது 15 நாட்களாகவும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பேச்சாளர் ரச்சடா தனதீரக் கூறுகையில், சுற்றுலா துறை முக்கியமானதாக இருந்தாலும், சிலர் இந்த சலுகையை தவறாக பயன்படுத்தியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் விசா விதிமுறைகளில் இருந்த தளர்வுகளை பயன்படுத்தி சட்டவிரோத தொழில்கள், அனுமதியில்லாத வேலைகள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.





