வாகன இறக்குமதிக்கு தற்காலிக 50% சுங்க வரி உயர்வு : அமைச்சரவை அனுமதி

மத்திய கிழக்கில் நிலவும் ஆயுத மோதல் சூழ்நிலை மற்றும் அதனால் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கு தற்காலிகமாக 50% சுங்க இறக்குமதி வரி (Customs Import Duty) கூடுதல் கட்டணமாக விதிக்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி, இந்த கூடுதல் வரி தொடர்பான உத்தரவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தெரிவித்ததாவது, கடந்த மே 16 ஆம் திகதி முதல் இந்த surcharge அமுலுக்கு வந்துள்ளதுடன், மூன்று மாதங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும்.

மேலும், மே 16க்கு பின்னர் திறக்கப்படும் Letter of Credit (LC) அடிப்படையிலான வாகன இறக்குமதிகளுக்கு மட்டுமே இந்த கூடுதல் வரி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மே 15க்கு பின்னர் ஏற்கனவே திறக்கப்பட்ட LC-களில் வாகன எண்ணிக்கை, Vehicle Identification Number (VIN), தொழில்நுட்ப விவரங்கள் அல்லது வாகன வகை போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், அவையும் இந்த surcharge வரிக்குள் கொண்டு வரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை மூலம் மூன்று மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவதுடன், ஏற்கனவே நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள வாகனங்களின் விலைகளில் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore