3 ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளதாக சவூதி அறிவிப்பு

தமது வான்பரப்புக்குள் பிரவேசித்த மூன்று ட்ரோன்களை இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

குறித்த ட்ரோன்கள் ஈராக் வான்வெளியில் இருந்து நுழைந்ததாகக் சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.

தமது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலடி கொடுக்க தேவையான செயல்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக சவூதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து ஈரான் மோதலின் போது நடந்த விரோதப் போக்குகள் பெருமளவில் குறைந்துள்ளன.

இருப்பினும் ஈராக்கிலிருந்து சவூதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை நோக்கி ட்ரோன்கள் ஏவப்பட்டு வருகின்றன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நேற்று (18) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதனால் கதிரியக்கப் பாதுகாப்பு அளவுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எவருக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்படவில்லை என்றும் ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவும், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு முழு உரிமை உண்டு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore