“வளமான நாடு – அழகான வாழ்க்கை” அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை கால்நடை மிருக வைத்திய அதிகாரி காரியாலயத்தின் புதிய கட்டிட நிர்மாணத்திற்காக ரூபா 20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (29) வெள்ளிக்கிழமை மாவட்ட பிரதி மிருக வைத்திய பணிப்பாளர் டாக்டர் நௌசாட் ஜமால்டீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜயந்தலால் ரத்னசேகர கலந்துகொண்டார்.
கௌரவ அதிதியாக கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளரும், “க்ளீன் ஸ்ரீலங்கா” ஜனாதிபதி செயலக சம்மாந்துறை பிரதேச இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான வை. பி. நபாஸ் உள்ளிட்டோர் மற்றும் பிரஜா சக்தி தவிசாளர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.





