காசாவின் 70% பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவு – நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, காசா பகுதியின் 70 சதவீத நிலப்பரப்பை இஸ்ரேல் இராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரையில் நடைபெற்ற மாநாட்டொன்றில் உரையாற்றிய அவர், “ஹமாஸுக்கு எதிரான பிடியை மேலும் இறுக்கிக் கொண்டிருக்கிறோம். தற்போது காசாவின் 60% பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். அடுத்த கட்டமாக 70% பகுதிக்குச் செல்ல வேண்டும்” என கூறினார்.

2025 அக்டோபரில் அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் படைகள் “Yellow Line” எனப்படும் எல்லைப் பகுதிவரை பின்வாங்கியிருந்தன. எனினும், தற்போது இஸ்ரேல் படைகள் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் புதிய நிலப்பரப்புகளை கைப்பற்றுவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை என குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், காசாவின் மேலும் அதிகமான பகுதிகள் கைப்பற்றப்பட்டால், சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனர்கள் மிகச் சிறிய பகுதிகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை உருவாகும் என சர்வதேச தரப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும், போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னரும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 850க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore