ஆன்லைன் விளையாட்டு பொருட்கள் மோசடி: பிஷிங் தாக்குதலில் 22 வயது இளைஞர் கைது

இலங்கை போலீசார், ஆன்லைன் விளையாட்டு பொருட்கள் விற்பனை எனக் கூறி வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 408,000 மோசடி செய்த சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு மாகாண கணினி குற்றப்பிரிவு (Computer Crimes Unit) மேற்கொண்ட விசாரணையில், சந்தேகநபர் போலியான ஆன்லைன் விளையாட்டு பொருட்கள் விற்பனை நிறுவனம் போல நடித்து, வாடிக்கையாளரை ஏமாற்றி ஆர்டர் செய்ய வைத்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், பிஷிங் லிங்க் மற்றும் தீங்கிழைக்கும் (malicious) banking Trojan செயலி மூலம் பாதிக்கப்பட்டவரின் மொபைல் போனுக்கு ரிமோட் அணுகல் பெற்றுக் கொண்டு பணம் திருடப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மககனிகம, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore