பொலிஸ் சோதனைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை – பொலிஸ் எச்சரிக்கை

வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பொலிஸார் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தவறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனASP. F. U. Wootler எச்சரித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சோதனை, கைது மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, இன்று மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.

அதன்படி, மூன்று பொலிஸ் சோதனைச் சாவடிகளில் நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவை மீறி சென்ற கார் ஒன்றின் மீது, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், சீதுவ பகுதியில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், குறித்த வாகனமும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore