Sri Lanka Army தனது விசேட படைப் பிரிவின் மூலம் கொழும்பில் அமைந்துள்ள ITC Ratnadipa ஹோட்டலில் சிறப்பு நகர்ப்புற இராணுவ நடவடிக்கை பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
“Operation Hard Duck” எனப் பெயரிடப்பட்ட இந்த விசேட பயிற்சி நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
நகர்ப்புற சூழல்களில் விசேட படைகளை எவ்வாறு தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவது என்பது தொடர்பில் இந்த பயிற்சி கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகர்ப்புற பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசர தலையீடுகள் மற்றும் விசேட செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.





