International Monetary Fund (IMF) அமைப்பின் நிர்வாக சபை, இலங்கைக்கான Extended Fund Facility (EFF) திட்டத்தின் 5 மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை இன்று (27) பரிசீலிக்கவுள்ளது.
இந்த மீளாய்வின் போது, திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்டுள்ள முன்னேற்றங்கள் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளதுடன், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெறும் வாய்ப்பு உள்ளது.
முன்னதாக IMF தொடர்பாடல் துறை பணிப்பாளர் தெரிவித்ததாவது, மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவின மீட்பு விலை நிர்ணய முறைமைகளை நடைமுறைப்படுத்துவதும், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதும் இந்த மீளாய்வுகளுக்கான முக்கிய நிபந்தனைகளாகும் என கூறியிருந்தார்.





