தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய விரிவுரையாளராக நியமனம் பெற்ற சம்மாந்துறை இளம் கல்வியாளர் ஜெல்ஸா!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தில் புதிய விரிவுரையாளராக இளம் கல்வியாளர் முஹம்மட் அலியார் பாத்திமா ஜெல்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (26) நடைபெற்ற நிகழ்வில், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் A.M.M. Musthafa அவர்களிடம் இருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது பட்டமளிப்பு விழாவில் முகாமைத்துவ பீடத்தில் 4.00/ 4.00 GPA பெறுபேற்றுடன் சிறந்த சாதனையை பதிவு செய்ததுடன், “AL-HAJ A.L. Ibralebbe Memorial Medal for the Best Student in Management 2016/2017” விருதையும் பெற்றிருந்தார்.

இதற்கு முன்னர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் உதவி விரிவுரையாளராக பணியாற்றிய அவர், தொடர்ந்து MBA மேற்படிப்பையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தெரிவாகியதையடுத்து, தற்போது அதே பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி துறையில் அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் சாதனைகள் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக பாராட்டப்படுகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore