விமானங்களில் Power Bank பயன்பாடு தொடர்பில் பிரிட்டன் விமானப் பாதுகாப்பு எச்சரிக்கை!

பயணிகளால் கொண்டு செல்லப்படும் Power Bank சாதனங்கள் விமானங்களில் தீப்பற்றுதல் மற்றும் அதிக வெப்பமடைதல் போன்ற ஆபத்துகளை அதிகரித்து வருவதாக பிரிட்டன் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக Lithium-ion battery கொண்ட portable chargers தவறான முறையில் கையாளப்படும் போது கடுமையான பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பயணிகள் விமான நிறுவனங்களின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என CAA வலியுறுத்தியுள்ளது.

அதன்படி:

▪️ Power Bank-களை checked luggage (பொதி சரக்கு) இல் வைக்கக் கூடாது
▪️ அவை hand luggage-இல் மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும்
▪️ ஒருவருக்கு அதிகபட்சம் இரண்டு Power Bank மட்டுமே அனுமதி
▪️ விமானப் பயணத்தின் போது Power Bank பயன்படுத்துதல் அல்லது charge செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்

சமீபத்தில் எகிப்தில் இருந்து லண்டன் நோக்கி பயணித்த EasyJet விமானம் ஒன்றில் Power Bank ஒன்று சரக்கு பகுதியில் இருந்ததாக தெரியவந்ததால், அவசர முன்னெச்சரிக்கையாக ரோம் நகரில் தரையிறக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகே இந்த எச்சரிக்கை மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் வாரத்திற்கு சராசரியாக இரண்டு விமானங்களில் battery overheating சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், கோடை காலத்தை முன்னிட்டு விமானப் பயணிகளுக்கான விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் CAA ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore