நாட்டில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தென்மேற்கு பகுதிகளில் மழை நிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையாக மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான கடும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
மத்திய மலைநாட்டு மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





