அமெரிக்காவுடன் உடன்பாடு உடனடியாக இல்லை – ஈரான் விளக்கம்

அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உடன்பாடு விரைவில் கையெழுத்தாகும் நிலை இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio விரைவில் ஒப்பந்தம் எட்டப்படலாம் என கூறியிருந்த நிலையில், ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmail Baqai இதுகுறித்து பதிலளித்தார்.

“பேச்சுவார்த்தையில் உள்ள பல முக்கிய அம்சங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உடன்பாடு உடனடியாக கையெழுத்தாகும் என்று யாரும் கூற முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களின் தகவல்படி, முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 60 நாள் போர்நிறுத்த நீட்டிப்பு, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு மற்றும் ஈரானின் அணு திட்டம் தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இரு தரப்பும் உடன்பாட்டிற்கு நெருங்கிவிட்டதாக கூறியிருந்தார். பின்னர் பேச்சுவார்த்தையை அவசரப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானின் உயர் தலைவர் மோஜ்தபா காமனேயுடன் ஏற்பட்ட தொடர்பு சிக்கல்கள் காரணமாக பேச்சுவார்த்தை தாமதமடைந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடைகள் நீக்கம், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகள் விடுவிப்பு மற்றும் ஈரானின் அணு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore