இலங்கை ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று (மே 25) குறிப்பிடத்தக்க அளவில் மதிப்பு உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்ட தகவலின் படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 342.67 இலிருந்து ரூ. 326.01 ஆக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை விலை ரூ. 353.17 இலிருந்து ரூ. 336.42 ஆக குறைந்துள்ளது.
மேலும், இலங்கை ரூபாய் குவைத், சவுதி ரியால் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது வெளிநாட்டு நாணய சந்தையில் ரூபாயின் நிலைமை மேம்பட்டு வருவதை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.





