ஜூன் 1ல் LPL வீரர் ஏலம்: வெளியான 5 முக்கிய தகவல்கள்

Lanka Premier League 2026 தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாக Sri Lanka Cricket அறிவித்துள்ளது.

LPL 2026 தொடர்பாக வெளியான முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

  • இந்த ஆண்டைய தொடரில் பங்கேற்க 650க்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • மொத்தமாக 21 கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிகபட்ச பதிவுகளை பாகிஸ்தான் வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து 102 வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் 75, தென்னாப்பிரிக்கா 66, பங்களாதேஷ் 48, நியூசிலாந்து 41, அவுஸ்திரேலியா 24, இங்கிலாந்து 15 மற்றும் இந்தியா 12 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • பதிவு செய்யப்பட்ட அனைவரும் ஏலத்தில் இடம்பெறமாட்டார்கள். பரிசீலனைக்குப் பிறகு 310 வீரர்கள் மட்டுமே இறுதி பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர்.
  • LPL 2026 தொடர் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் இலங்கையின் முக்கிய T20 உள்ளூர் தொடராக LPL தொடர்ந்தும் நடைபெறுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore