மே 22 முதல் 25 வரை நிலவிய கடும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கையின் 8 மாவட்டங்களில் 5,803 குடும்பங்களைச் சேர்ந்த 22,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) தெரிவித்துள்ளது.
இதில் 379 குடும்பங்களைச் சேர்ந்த 1,507 பேர் 21 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 248 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இன்று (25) காலை 6.00 மணி நிலவரப்படி, கம்பஹா மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கொழும்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 860 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.





