வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸாரின் எச்சரிக்கை

உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரநிர்ணயமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை செலுத்த வேண்டாம் எனப் பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், மாற்றங்கள் செய்யப்பட்ட இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி சட்டப்பூர்வமாக வாகனங்களை செலுத்த முடியாது எனப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வாகனத்தின் இலக்கத்தை ‘A4’ அளவிலான காகிதத்தில் அச்சிட்டுக் காட்சிப்படுத்த சாரதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விநியோகஸ்த்தர் ஒருவர் இல்லாத காரணத்தினால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கடந்த 10 மாதங்களாக வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது.

இதன் விளைவாக சுமார் 400,000 இலக்கத் தகடுகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான உத்தியோகபூர்வமற்ற இலக்கத் தகடுகளைக் காட்சிப்படுத்தும் வாகனங்களுக்குப் பொலிஸார் அபராதம் விதிப்பது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்துப் பதிலளித்துள்ள பொலிஸார், அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore