Donald Trump தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், குடிவரவு கொள்கையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
புதிய விதிமுறையின் கீழ், தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தங்களது சொந்த நாடுகளில் இருந்தே Green Card விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
இதுவரை அமலில் இருந்த முறையின் கீழ், பலர் அமெரிக்காவுக்குள் இருந்தபடியே தங்களது நிரந்தர குடியுரிமை (Green Card) விண்ணப்ப செயல்முறைகளை நிறைவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் புதிய கொள்கையின் மூலம் அந்த நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், “அசாதாரண சூழ்நிலைகள்” (Extraordinary Circumstances) என கருதப்படும் சில விசேட நிலைகளில் மட்டுமே அமெரிக்காவுக்குள் இருந்து விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு, அமெரிக்க குடிவரவு நடைமுறைகளில் பெரிய மாற்றமாகக் கருதப்படுவதுடன், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு குடியேற்ற விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





