சீன நிலக்கரி சுரங்க வெடிப்பு : உயிரிழப்பு 90 ஆக உயர்வு

China நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க வாயு வெடிப்பு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வெடிப்பு நேற்று (22) மாலை கின்யுவான் கவுண்டியில் அமைந்துள்ள Liushenyu Coal Mine சுரங்கத்தில் இடம்பெற்றது. சம்பவம் நடந்த போது சுமார் 247 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தபோது உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Xi Jinping காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்கவும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை முழு அளவில் முன்னெடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விபத்திற்கான காரணம் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்களை கண்டறிய விரிவான விசாரணை நடத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துக்குப் பொறுப்பான சுரங்க நிறுவனத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சுரங்க விபத்து கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவில் பதிவான மிக மோசமான சுரங்க அனர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore