National Building Research Organisation (NBRO) நாடு முழுவதும் நிலவும் கடும் மழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
🔴 சிவப்பு எச்சரிக்கை / உடனடி வெளியேற்ற அறிவிப்பு
கேகாலை மாவட்டத்தின் டெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட பகுதிகளுக்கும்,
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, குருவிட்ட, அயகம, இரத்தினபுரி பகுதிகளுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
🟠 இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை – அவதானமாக இருக்குமாறு அறிவுரை
கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, படுக்க;
கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல;
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, ஹொரணை, இங்கிரிய, பாலிந்தனுவர;
கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை;
இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, கிரியல்ல, எலபாத, கலவான, நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
🟡 மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை
கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, திவுலபிட்டிய;
களுத்துறை மாவட்டத்தின் ஆகலவத்த, மாதுகம;
கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய;
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக மழை பெய்யும் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், நிலச்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





