மொபைல் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – Sri Lanka Police விசேட விழிப்புணர்வு அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தினமும் மொபைல் தொலைப்பு, தவறவிடுதல் மற்றும் திருட்டு தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக Sri Lanka Police தெரிவித்துள்ளது.

தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்கள் சமூக விரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதால், உரிமையாளர்கள் கடுமையான ஆபத்துகளுக்கு உள்ளாகலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மொபைல்களில் உள்ள வங்கி தகவல்கள், தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔹 மொபைல் தொலைந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை:

✅ SIM கார்டை உடனடியாக முடக்க வேண்டும்
தொலைபேசி சேவை வழங்குநர் மூலம் SIM ஐ செயலிழக்கச் செய்ய வேண்டும். இது பிறர் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்கும்.

✅ IMEI இலக்கத்தை பொலிஸில் வழங்க வேண்டும்
முறைப்பாடு செய்யும்போது International Mobile Equipment Identity (IMEI) இலக்கத்தை வழங்குவது அவசியம்.

✅ IMEI இலக்கத்தை முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்
மொபைலில் *#06# என டயல் செய்வதன் மூலம் IMEI இலக்கத்தை பெறலாம்.

🔹 “I Need” முறைமை அறிமுகம்

I Need Police System இணையதளத்தின் மூலம் மொபைல் விவரங்களை பதிவு செய்யலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் “Find Genuine Phone” வசதியின் மூலம் வாங்கவிருக்கும் புதிய அல்லது second-hand மொபைல் திருடப்பட்டது அல்லது தொலைந்தது என பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.

📊 பொலிஸ் தரவுகளின்படி:

▪️ 2024ஆம் ஆண்டு – 2,796 தொலைந்த மொபைல்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
▪️ 928 திருடப்பட்ட மொபைல்கள் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.
▪️ 2025ஆம் ஆண்டு – 2,355 மொபைல்கள் மீட்கப்பட்டதுடன், 1,019 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

⚖️ மற்றொருவரின் பொருளை தன்னிடத்தில் வைத்திருப்பது குற்றம்

தமக்குச் சொந்தமல்லாத பொருளை கண்டெடுத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட மொபைல் அல்லது பொருட்களை குறைந்த விலையில் வாங்கி வைத்திருப்பதும் குற்றமாகும். இவ்வாறான குற்றங்களுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore