முல்லேரியாவில் சூப்பர்மார்க்கெட்டுக்கு ரூ. 5 இலட்சம் அபராதம் – அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்ததால் நடவடிக்கை

முல்லேரியாவில் உள்ள பிரபலமான சூப்பர்மார்க்கெட் ஒன்று இறக்குமதி செய்யப்பட்ட ‘கீரி பொன்னி’ அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ததற்காக ரூ. 5,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் கடந்த (18) இந்த தீர்ப்பை வழங்கியது.

நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) கொழும்பு மாவட்ட அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை (MRP) கிலோவுக்கு ரூ. 30 அதிகமாக அந்த சூப்பர்மார்க்கெட் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

விசாரணையின் போது கடை உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் அபராதம் விதித்தது.

நுகர்வோர் விவகார அதிகார சபை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வது சட்டவிரோதம் எனவும், பொதுமக்கள் MRP சரிபார்த்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore