இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், The Ceylon Chamber of Commerce மற்றும் Confederation of Indian Industry இணைந்து மும்பையில் அண்மையில் India–Sri Lanka Business Forum மற்றும் CEO சந்திப்பை நடத்தியுள்ளன.

இந்த நிகழ்வில் இரு நாடுகளின் அரச அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் கலந்து கொண்டு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம், போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், கல்வி மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் Mahishini Colonne உரையாற்றுகையில், இந்தியா – இலங்கை உறவு வெறும் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கானதல்ல என்றும், நீண்டகால கூட்டாண்மைகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை உருவாக்கும் புதிய கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் Duminda Hulangamuwa, இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து வளர்ச்சி நோக்கிய பாதைக்கு நகர்ந்து வருவதாகவும், அந்த பயணத்தில் இந்தியா முக்கிய பங்குதாரராக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், போக்குவரத்து, டிஜிட்டல் சேவைகள், சுற்றுலா மற்றும் உயர்மதிப்புள்ள உற்பத்தித்துறைகளில் இந்திய முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது எனவும் தெரிவித்தார்.

John Keells Holdings தலைவர் மற்றும் Ceylon Chamber தலைவர் Krishan Balendra, இந்தியா இலங்கைக்கு அண்டை நாடு மட்டுமல்லாது, பொருளாதார மாற்றத்திற்கான முக்கிய கூட்டாளி என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது கடல் மற்றும் விமான இணைப்புகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் கட்டண முறைகளை ஒருங்கிணைத்தல், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சி போன்ற விடயங்களும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் கட்டுமானம், சுற்றுலா, மருந்துத்துறை, ICT, உற்பத்தித்துறை, நிதிசேவைகள் மற்றும் வர்த்தக வசதிப்படுத்தல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்று, புதிய முதலீட்டு மற்றும் கூட்டாண்மை வாய்ப்புகளை ஆராய்ந்தனர்.

இந்தியா – இலங்கை பொருளாதார உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையுடனும், நீண்டகால பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் உறுதிப்பாட்டுடனும் இந்த Business Forum நிறைவடைந்தது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore