மின்னல் அபாய எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.

Department of Meteorology Sri Lanka இன்று (19) நாட்டின் உவா மாகாணத்திற்கும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் கடுமையான மின்னல் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும் இந்த அறிவிப்பின் கீழ், நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு (Red Alert) எச்சரிக்கையும் மேலும் எட்டு மாவட்டங்களுக்கு அம்பர் (Amber Alert) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

மதியம் 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளதாகவும், சில இடங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடிய வாய்ப்பும் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வகையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore