Sri Lanka National Rugby Team ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இன்று காலை நாடு திரும்பி, வரலாற்று சாதனையுடன் வரவேற்கப்பட்டனர்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கெண்டில் நடைபெற்ற முதற்கட்ட CASA Sevens Rugby Tournament போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து இந்த வரவேற்பு இடம்பெற்றது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் விளையாட்டு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பெற்றோர் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினர்.
ஆண்கள் அணி இந்தியாவை 31–10 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல் பெண்கள் அணி கசகஸ்தானை 27–0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளும் தொடர்ச்சியாக தோல்வியின்றி விளையாடி, ஆசிய பிராந்திய ரக்பியில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளது.





