இந்திய கிரிக்கெட் வீரர் Shreyas Iyer-இன் சகோதரி ஷ்ரெஸ்டா ஐயர், IPL 2026 தொடரில் Punjab Kings அணி வெளியேறியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏற்பட்ட கடுமையான Troll மற்றும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
Punjab Kings மற்றும் Kolkata Knight Riders அணிகளை தொடர்புபடுத்தி அவர் முன்பு வெளியிட்டிருந்த ஒரு “fun banter” reel மீண்டும் வைரலானதையடுத்து இந்த சர்ச்சை உருவானது.
மழையால் பாதிக்கப்பட்ட போட்டிக்குப் பிறகு அவர் கொண்டாடும் காட்சி இடம்பெற்றிருந்த அந்த வீடியோவை சிலர் தவறாக எடுத்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Instagram வீடியோவில் பேசிய அவர்:
“அந்த reel வெறும் ஜாலியான banter மட்டுமே. யாரையும் அவமதிக்கும் நோக்கம் இல்லை. எல்லா கிரிக்கெட் வீரர்களிடமும் எனக்கு மரியாதை உள்ளது” என கூறினார்.
மேலும், சமூக வலைதள விமர்சனங்களைத் தாண்டி, சிலர் தனது வேலை இடத்திற்கும் தொடர்பு கொண்டு சக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரையும் தொந்தரவு செய்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
“இதற்கெல்லாம் நான் வருந்துகிறேன்… உங்களைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது” என்றும் ஷ்ரெஸ்டா ஐயர் தெரிவித்துள்ளார்.





