புகையிலை பயன்பாட்டினால் ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணம்

புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்தச் சிறிய நாட்டிற்குள் புகையிலை பயன்பாட்டின் காரணமாக வருடத்திற்கு தோராயமாக 22,000 பேர் வரை அகால மரணமடைகின்றனர். பொருளாதார இழப்புகள் பற்றி பேசினால், 2016 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி வருடத்திற்கு தோராயமாக 214 பில்லியன் ரூபாய் செலவாகிறது. இது ஒரு தாமரைக்கோபுரம் கட்டுவதற்குச் சமம். புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பராமரிப்பதற்காக நாம் செலவிடும் தொகையானது, 16 தாமரைக்கோபுரங்களைக் கட்டுவதற்கு அல்லது இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளை (Highways) அமைப்பதற்குச் செல்லும் தொகையாகும்.”

இலங்கையில் மாத்திரம் 9 முதல் 11 மில்லியன் வரையிலான சிகரெட் பில்டர்கள் சூழலில் விடுவிக்கப்படுகின்றன. இந்த உபயோகிக்கப்பட்ட பில்டர்களில் கடுமையான இரசாயனங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றால் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் அளவிட முடியாதவை.” என்றார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore