சவுதி அரேபியாவின் மினா பகுதியில் வருடாந்திர ஹஜ் யாத்திரை இன்று ஆரம்பமாகியுள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்துள்ள சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் இதில் பங்கேற்று புனித யாத்திரையை நிறைவேற்றுகின்றனர்.
மினா முகாமில் தொடங்கும் இந்த ஹஜ் பயணம், இஸ்லாமின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் பங்கேற்பவர்கள் மக்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் பல்வேறு மதச் சடங்குகளை நிறைவேற்றுவார்கள்.
சவுதி அதிகாரிகள் யாத்திரை பாதுகாப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





