Canada, UK, France, Germany உள்ளிட்ட 7 நாடுகள் இணைந்து இஸ்ரேலின் West Bank கொள்கைகளுக்கு கடும் கண்டனம்

Canada, United Kingdom, France, Germany உள்ளிட்ட 7 நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், Israel இன் West Bank பகுதியில் மேற்கொள்ளப்படும் குடியேற்ற விரிவாக்கம் மற்றும் குடியேற்றவாசிகளின் வன்முறைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கையில், West Bank பகுதியில் குடியேற்றவாசிகளின் வன்முறை “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது. இந்த நிலைமை இரண்டு நாடு தீர்வுக்கான வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கிறது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை எனவும், E1 பகுதியில் முன்மொழியப்பட்ட கட்டுமானத் திட்டங்கள் West Bank பகுதியை இரண்டாகப் பிரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன. இது “சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்” எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியேற்ற தொடர்பான எந்த கட்டுமானத் திட்டங்களிலும் நிறுவனங்கள் ஈடுபட வேண்டாம் எனவும், அவ்வாறு ஈடுபட்டால் சட்ட மற்றும் கண்ணிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்த 7 நாடுகள், Israel அரசாங்கத்தை குடியேற்ற விரிவாக்கத்தை நிறுத்தவும், குடியேற்றவாசிகளின் வன்முறைக்கு பொறுப்பாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்புப் படைகள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், மேலும் Palestinian Authority மீது விதிக்கப்பட்ட நிதி கட்டுப்பாடுகளை தளர்த்தவும் வலியுறுத்தியுள்ளன.

அத்துடன், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இரு நாடுகளும் அமைதி மற்றும் பாதுகாப்புடன் வாழும் வகையில் இரண்டு நாடு தீர்வை ஆதரிப்பதாகவும் அந்த நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore