முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான Sanath Jayasuriya, Sri Lanka Cricket உயர் செயல்திறன் மையத்தின் ஆலோசகர் பதவியில் இருந்து இந்த மாத இறுதியில் அமுலுக்கு வரும் வகையில் விலகியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள Cricket Transformation Committeeக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தனது நியமனம் மற்றும் Matara District Cricket Association தலைவர் பதவி தொடர்பாக சிலர் நலன் மோதல் (Conflict of Interest) குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அணி கடினமான காலகட்டத்தை எதிர்கொண்ட போது, இலங்கை கிரிக்கெட்டிற்காக சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதால் தான் இந்தப் பொறுப்புகளை ஏற்றதாகவும், வேலை தேவைக்காக அல்ல என்றும் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற காலத்தை நினைவுகூர்ந்த அவர், ICC Champions Trophy போட்டிக்கு இலங்கை தகுதி பெறாததும், அணியின் செயல்திறன் சரிந்திருந்ததுமான சூழ்நிலையில் தான் அந்தப் பொறுப்பை ஏற்றதாக கூறினார்.
உள்ளூர் பயிற்சியாளர் குழுவும் வீரர்களும் இணைந்து இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக முக்கிய தொடர் வெற்றிகளைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ICC T20 World Cup Super 8 சுற்றில் ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து குறிப்பிட்ட ஜெயசூரிய, முக்கிய வீரர்களின் காயங்கள் மற்றும் போட்டிக்கு முன் செய்யப்பட்ட சில அமைப்பு மற்றும் பணியாளர் மாற்றங்கள் அணியின் திட்டங்களை பாதித்ததாக தெரிவித்தார்.
மத்தறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்துடன் தனது தொடர்பு குறித்து பேசும்போது, அந்த மாவட்டத்தில் இருந்து வளர்ந்த வீரராக கிரிக்கெட் மேம்பாடு தமக்கு மிகவும் நெருக்கமான விஷயமாக இருப்பதாக கூறினார்.
எனினும், புதிய நிர்வாகம் இந்த இரு பொறுப்புகளையும் முரண்பாடாகக் கருதினால், மத்தறையில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பணியாற்றுவதைத் தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நிர்வாகத்தின் பணிகளுக்கு தாம் தடையாக இருக்க விரும்பவில்லை என்றும், இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் அதன் பொற்காலத்துக்கு கொண்டு செல்ல அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ பதவி இல்லாவிட்டாலும், இலங்கை கிரிக்கெட் மற்றும் வீரர்களுக்கான தனது ஆதரவு எப்போதும் தொடரும் என்றும், அமைப்புக்கு வெளியிலிருந்தும் விளையாட்டை ஆதரிப்பேன் என்றும் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.





