டொலர் விற்பனை விலை ரூ. 350 ஐ கடந்தது

இலங்கையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (21) மேலும் சரிவடைந்துள்ளதாக வணிக வங்கிகளின் மாற்று விகிதங்கள் தெரிவிக்கின்றன.

சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 350 ஐ கடந்துள்ளது.

Seylan Bank வங்கியின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 333.75 மற்றும் ரூ. 345.50 ஆக மாற்றமின்றி பதிவாகியுள்ளது.

NDB Bank வங்கியில், கொள்வனவு விலை ரூ. 335 இலிருந்து ரூ. 344 ஆகவும், விற்பனை விலை ரூ. 345 இலிருந்து ரூ. 354 ஆகவும் உயர்ந்துள்ளது.

People’s Bank அறிவித்துள்ளதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 335.64 இலிருந்து ரூ. 344.44 ஆகவும், விற்பனை விலை ரூ. 345.20 இலிருந்து ரூ. 354.74 ஆகவும் அதிகரித்துள்ளது.

அதேவேளை, Commercial Bank வங்கியில் கொள்வனவு விலை ரூ. 343.09 ஆகவும், விற்பனை விலை ரூ. 354.25 ஆகவும் உயர்ந்துள்ளது.

Sampath Bank வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 344.50 ஆகவும், விற்பனை விலை ரூ. 353.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore