மலபே – கடுவெல வீதி அபிவிருத்திக்கு ரூ. 819 மில்லியன் ஒப்பந்தம்

தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மலபே – கடுவெல (B 263) வீதியின் 5.56 கிலோமீற்றர் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய போட்டி கொள்முதல் நடைமுறையின் கீழ் எட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில், உயர்மட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த மற்றும் தகுதியான விண்ணப்பதாரராகத் தெரிவான Senarath Engineering நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மொத்த பெறுமதி VAT தவிர்த்து ரூ. 819 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், மலபே – கடுவெல பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு பிராந்திய அபிவிருத்திக்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore