Sajith Premadasa பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் வறுமைக் கோட்டுக் கணக்கீட்டை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
ஒரு நபர் மாதத்திற்கு ரூ.16,690 மட்டும் வைத்து வாழ முடிகிறதா என அவர் சவால் விடுத்துள்ளார். அரசாங்கம் வெளியிட்டுள்ள வறுமைக் கோட்டுக் கணிப்பு மக்களின் உண்மை வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய பொருளாதார சூழலில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தக் கணக்கீடு மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை சரியாக வெளிப்படுத்தவில்லை என பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.





