அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பில்லியனர் தொழிலதிபர் Elon Musk தோல்வியடைந்துள்ளார்.
OpenAI மற்றும் அதன் நிர்வாகத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கில், நிறுவனம் தனது ஆரம்பகால இலாபநோக்கற்ற செயற்பாட்டு நோக்கத்திலிருந்து விலகி, இலாப நோக்கமுள்ள அமைப்பாக மாறியதாக மஸ்க் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், Sam Altman உள்ளிட்ட OpenAI நிர்வாகிகள் மற்றும் அதன் வணிக கூட்டாண்மைகள் குறித்தும் அவர் சவால் முன்வைத்திருந்தார்.
ஆனால், கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்கு சட்டப்படி அனுமதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த பின்னரே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜூரி குழு ஒருமனதாக தீர்ப்பளித்தது.
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான ஆலோசனைக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, OpenAIக்கு முக்கியமான சட்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மஸ்க் தரப்பு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





