தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை பேணும் நோக்கில், கூரைமேல் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளின் உரிமையாளர்கள் இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை தங்களது அமைப்புகளை தன்னார்வ அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்துமாறு National System Operator (Private) Limited கோரிக்கை விடுத்துள்ளது.
வெசாக் விடுமுறை காலத்தில் நாடளாவிய மின் தேவையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டமைப்பின் பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான செயற்பாட்டை உறுதிப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என தேசிய முறைமை இயக்குநர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் அடிப்படையில், தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஆதரவாக, கூரைமேல் சூரிய மின் அமைப்புகளின் உரிமையாளர்கள் இந்த தற்காலிக கோரிக்கைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





