எம்.எஃப். ருஃப்ஸீன்
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் நிரந்தர பொறுப்பதிகாரராக (OIC) பொலிஸ் பரிசோதகர் (IP) டி.எஸ். இந்திக இன்று (30) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதற்கு முன்னர் நூரியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இந்திகா அவர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் சிறப்பான சேவையாற்றியதாக அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டவர். குறிப்பாக, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர் முன்னின்று செயல்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
அவரது திடீர் இடமாற்றம் தொடர்பாக நூரியா பிரதேச மக்களிடையே வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள இந்திகா அவர்கள் சாய்ந்தமருது பிரதேசத்திலும் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில் தனது சேவைகளை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.



