தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஆண்டுக்கான மே தினப் பேரணி அம்பாறையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு நீதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன நானயக்கார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களுடன், சம்மாந்துறை அமைப்பாளரும் கௌரவ பிரதேச சபை உறுப்பினருமான வை. பி. எம். நபாஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
இம்முறை நடைபெற்ற மே தினப் பேரணியில் வரலாறு காணாத அளவில் பெரும் மக்கள் திரள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
“மக்கள் ஆட்சிக்கு மக்கள் பலம்” என்ற கருத்தை முன்வைத்து நடைபெற்ற இந்த பேரணி, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



