மாலைப்பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மத்திய, சபரகமுவ, ஊவா, தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், மேலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், மழை பெய்யும் நேரங்களில் சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைப்பதற்காக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore