நாளை (ஏப்ரல் 03) நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான Heat Index, 21 மாவட்டங்களில் சில இடங்களில் “Caution Level” வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீண்ட நேரம் வெப்பத்திற்கு உட்பட்டால் உடல் சோர்வு (Fatigue) ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், தொடர்ந்து உடல் உழைப்பு மேற்கொண்டால் தசை வலி (Heat cramps) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற நேரங்களில் வெளியில் செல்லாமல் இருக்கவும், அதிகளவு தண்ணீர் அருந்தவும், உடல் நலத்தை கவனிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





